தர்மபுரி மாவட்டம் தேங்காய் மரத்துப்பட்டி கிராமத்த சேர்ந்த ஷீலா என்கிற இளம் பெண், நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் அதேப் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 3 வருடங்களாக நீடித்த இந்த காதல், ஷீலாவின் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் கண்டித்ததால், ஷீலா சின்னசாமியுடனான காதலை முறித்துள்ளார்.

6 மாதங்களாக காதலை முறித்துக் கொண்ட கோபத்தில் இருந்த சின்னசாமி சம்பவத்தன்று, வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஷீலாவை, கத்தியால் கழுத்தில் ஒரு முறையும், வயிற்றில் இரு முறையில் குத்தியதில் நிலை தடுமாறி ஷீலா கீழே விழுந்தார். தப்பியோட முயன்றவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைந்தனர்.

காயமடைந்த ஷீலா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷீலாவின் அக்கா.

அதில், “என் தங்கை தற்போது சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட வேண்டாம். எனது தங்கையின் புகைப்படத்தையும் வெளியிட வேண்டாம்” என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version