தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் அருகே செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சரவணன் தலைமையில் ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழு காலை முதலே இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள், கணக்கு பதிவேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 44 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சோதனை நிறைவடைந்த பின்னர், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
