Close Menu
    What's Hot

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    தமிழகத்தில் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்…  எந்தெந்த நகரங்களில் இயக்கப்படும்?

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவலா..?? முன்னாள் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்த இபிஎஸ்..!!
    Featured

    அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவலா..?? முன்னாள் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்த இபிஎஸ்..!!

    editor5By editor5July 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 34
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 17-வது சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், திராவிடக் கட்சிகளின் நீண்டகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. எந்தக் கட்சிக்கும் 118 இடங்கள் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க முனைந்தது. திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் (5), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய கம்யூனிஸ்டு (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (2) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக அரசு உருவானது.

    இதன்மூலம் 59 ஆண்டுகால திராவிட ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கடந்த மே 10-ம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நடிகர் ஜோசப் விஜய் தமிழகத்தின் 12-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

    இவர்கள் கட்சித் தாவல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இருப்பினும், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை டாக்டர் சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

    முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், எஸ்.வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்ட பலரும் தவெகவுடன் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் பென்ஜமின் திமுகவுக்குச் சென்றார். அதிமுகவுக்குள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றோர் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்தப் பின்னணியில், தனக்கு எதிராகச் செயல்படும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி புதிய உத்தியை வகுத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசுகின்றன.

    அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தபோது அவர்கள் செய்ததாகக் கூறப்படும் முறைகேடுகள், பினாமி சொத்துக்கள் உள்ளிட்ட ரகசிய ஊழல் ஆவணங்களை எடப்பாடி தன் கைவசம் வைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆவணங்களை டெல்லி பாஜக தலைமைக்கு ரகசியமாக அனுப்பி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வியூகம் அதிமுகவுக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு தொடர்ந்து நிலைத்திருக்கும் சூழலில், எதிர்க்கட்சியான அதிமுகவின் உள்கட்சி மோதல்கள் மேலும் தீவிரமடையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெனிசுலாவை புரட்டிப்போட்ட இரட்டை நிலநடுக்கம்!. பலி எண்ணிக்கை 3,300 ஆக உயர்வு!. 50,000 பேர் மாயம்!
    Next Article பல.. பல.. பிளான்..!! பக்கா ஸ்கெட்ச் உடன் 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல் காந்தி..!!
    editor5

    Related Posts

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    July 6, 2026

    தமிழகத்தில் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்…  எந்தெந்த நகரங்களில் இயக்கப்படும்?

    July 6, 2026

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    தமிழகத்தில் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்…  எந்தெந்த நகரங்களில் இயக்கப்படும்?

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    அயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் ரூ.8லட்சம் நன்கொடை திருட்டு..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

    மேற்கு வங்கத்தில் சூப்பர் எமெர்ஜென்சி ; திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.