ஹைதராபாத்தில் இருந்து நேற்று பீகாரருக்கு புறப்பட்டு சென்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பாட்னாவில் இருந்து இன்று சென்னை திரும்பினார் சென்னை திரும்பியவுடன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையை விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெரும்பதை பதில்

அதிமுக போது எடப்பாடி பழனிச்சாமி விசுவாசமாக இருக்கிறாரா..

அந்த கட்சி ஆரம்பித்தது எம்ஜிஆர் எம்ஜிஆரை பற்றி பாஜக என்னென்ன பேசக்கூடாதோ அதை எல்லாம் பேசினார்கள் அம்மையார் ஜெயலலிதா குறித்து தண்டனை பெற்றவர் ஊழல்வாதி என்றெல்லாம் பேசினார்கள்..

அந்த கட்சியோடு கூட்டணி வைக்கலாமா அவர் அந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரா

எங்கள் கட்சியை பேசக்கூடிய அருகதை தகுதி அவருக்கு கிடையாது நாங்கள் நாற்காலிக்கு கீழே சென்று காலை பிடித்து பதவி பெறவில்லை

காங்கிரஸ் கட்சி மீது பற்று இல்லாமல் 20000 கமிட்டிகள் நியமித்திருக்கிறோம்.. பல்லாயிரம் கோடி சொத்துக்களை மீட்டு இருக்கிறோம்

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட்டணி அவர்கள் கட்சியை பற்றி கவலைப்பட சொல்லுங்கள்.

எங்கள் கூட்டணி பற்றி காங்கிரஸ் பற்றி அவருக்கு என்ன கவலை வேண்டி இருக்கிறது? எங்கள் கட்சி பற்றி நாங்கள் தான் கவலைப்பட வேண்டும் ‌.

திமுகவுடன் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவது எங்கள் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்..

ரத்தின கம்பளம் விரித்து உங்களை அழைக்கிறேன் என்று கம்யூனிஸிகளை அழைத்தார் கம்யூனிஸ்டுகள் அது ரத்தக் கம்பளம் என்று கூறினார் அதனால் கம்யூனிஸ்ட் எதிராக பேசினார்

எடப்பாடி பழனிச்சாமி தலைமைய விமர்சனம் செய்தவர்கள் உடன் அவர் கூட்டணி வைத்து இருக்கிறார்..

நான் தலித் இயக்கங்கள்தான் பயணித்தேன் தற்பொழுது தேசிய கட்சியில் இருக்கிறேன்..

இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசுவது பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை நடவடிக்கை எடுப்பார்கள்..

Share.
Leave A Reply

Exit mobile version