நாட்டில் எந்த கட்சியிலாவது குடும்ப ஆட்சி நடப்பதை பார்க்க முடிகிறதா? என முதலமைச்சர் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2வது நாளாக நீலகிரியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கூடலூர் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் பல கல்லூரிகள் திறக்கப்பட்டு கல்வியில் புரட்சி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரியவது கொண்டு வரப்பட்டதா? இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் தான் ஸ்டாலின் அரசு ரோல் மாடலாக உள்ளது. கமிஷன், ஊழல், வாரிசு அரசியல், குடும்ப ஆட்சி, ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதில் தாந்திமுக அரசு ரோல் மாடலாக உள்ளது.

எதிர்கட்சி தலைவராக இருந்தபோது 525 வாக்குறுதிகளை கொடுத்த ஸ்டாலின் அதில் 98 % வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார். அது முற்றிலும் பொய். இதிலும் நீங்கள் தான் ரோல் மாடல். ஃபோட்டோஷூட் நடத்துவதிலும் நீங்கள் ரோல் மாடல். கட்சியில் இருப்பவர்கள் உதயநிதி ஸ்டாலின் , ஸ்டாலினை புகழ்ந்து பேசுகிறார்கள். இவர்கள் போதாதுஎன்று தற்போது துர்கா ஸ்டாலினும் வந்துள்ளார்.

இவர்களை நாட்டுமக்கள் புகழ்ந்து பேசவில்லை. குடும்பமே அவர்களை புகழ்ந்து பேசிக் கொள்கிறது. திமுகவில் உள்ள அனைத்தையும் கருணாநிதி குடும்பமேஅனுபவிக்கின்றனர். திமுகவில் யாரும் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. உழைப்பைசுரண்டும் குடும்பம் ஸ்டாலின் குடும்பம்.

நாட்டில் உள்ள எந்த கட்சிலாவது இப்படி ஒரு குடும்ப ஆட்சி நடப்பதை பார்க்க முடிகிறதா?கட்சியிலும், ஆட்சியிலும் கருணாநிதி குடும்பம் மட்டுமே இருக்கும். இப்படிப்பட்ட கட்சி ஆட்சிக்கு வர வேண்டுமா?
செல்வப்பெருந்தகை பல கட்சியில் இருந்தவர்கள். காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கிறனர். ஆனால், ராகுல்காந்தி ஆட்சியில் பங்கு கேற்கவில்லை.செல்வப்பெருந்தகை தன் கட்சியைவளார்க்க்காமல் திமுகவையேதாங்கி பிடித்து கொண்டிருக்கிறார்.

செல்வப்பெருந்தகைகங்கிரஸுக்கு விசுவாசமாக இல்லை. இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதிமுக பாஜகவுக்கு அடிமை என்று ஸ்டாலின் பேசுகிறார். அதிமுகவில் தொண்டர்கள் கூட யாருக்கும் அடிமையில்லை. காங்கிரஸ் தலைவரை கூட திமுக தான் தேர்வு செய்கிறது. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட திமுக ஊழல் செய்யும்” என விமர்சித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version