மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப் பயணத்தின் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது..
வருகின்ற சட்டமன்ற தொகுதியில் நாம் வெற்றிபெற இக்கூட்டமே சாட்சி. திமுக நான்கு ஆண்டுகளில் கூடலூருக்கு என்ன திட்டம் கொண்டு வந்தார்கள். எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
அதிமுக ஆட்சி காலத்தில் அரசு அறிவியல் கல்லூரி கொண்டு வந்தது. நீலகிரி மக்களுக்காக அதிமுக உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 50 சதவீத பணிகள் முடிந்திருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்தனர்.
இதுபோல அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா நடத்துகிறது. மலை மாவட்டத்தில் உள்ள மக்கள் உயர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் கோவை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அதிமுக அறுவை மற்றும் உயர் சிகிச்சை பெற மருத்துவ கல்லூரி மருத்துவமனையை கொண்டு வர வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்டது. மருத்துவமனைகள் கட்டப்பட்டாலும் போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாததால் இந்த தொகுதி மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் குறை ஏற்படுகிறது.
2011 – 2021 வரை அதிமுக நடத்தியது பொற்கால ஆட்சி. 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொடுத்தது அதிமுக அரசு. அதே போல் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கொண்டு வந்த சாதனை அதிமுகவுக்கு உண்டு. 21 பாலிடெக்னிக் கல்லூரிகளை தமிழகத்தில் கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா ஆயிரம் கோடி செலவில் கொண்டுவரப்பட்டது .
2019-20 வரை உயர்கல்வி படிப்பதிலேயே தமிழகம் முன்னோடி மாவட்டமாக திகழ்ந்தது அதிமுக ஆட்சியில்தான். கல்விக்காக முக்கியத்துவம் கொடுத்தது அதிக நிதி ஒதுக்கியதும் அதிமுக தான்.
திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை. பொம்மை முதலமைச்சராக உள்ளார்.
சாத்தூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். இன்று நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சியை செய்வது ஸ்டாலின் தான் என்கிறார். பணம் கடன் வாங்குவதில் மட்டுமே திமுக அரசு ரோல் மாடலாக உள்ளது.
டாஸ்மாக் ஊழலில் திமுக கொள்ளையடிக்கிறது. 525 வாக்குறுதிகள் கொடுத்து 98 % நிறைவேற்றப்பட்டதாக கூறுகின்றனர். அத்தனையும் வடிகட்டிய பொய்.
கூட்டணி கட்சியில் காங்கிரஸ் பொறுப்பாளர் கே.எஸ்.அழகிரி சாற்றை குடித்துவிட்டு சக்கையை மட்டும் நமக்கு தருகிறார்கள் என கூறுகிறார். திமுக கட்சியை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கின்ற நபராக உள்ளார் செல்வ பெருந்தகை. பிச்சைக்காரர்கள் ஒட்டு போட்ட சட்டை போட்டிருப்பார்கள். அதுபோல் திமுகவுடன் கூட்டணி வைத்தால் தங்களுக்கு அதிகமான இடங்கள் வேண்டும் என்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டுவிட்டனர். அதனால் திமுக காங்கிரஸ் கூட்டத்தில் பிளவு ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸின் மாநில பொறுப்பாளரை திமுக நியமிக்கிறது. இப்படி அடிமைத்தனமாக இருப்பது திமுகவும் காங்கிரசும் தான்.
2026 மக்கள் சக்தியுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் அதை ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் பார்க்க தான் போகிறீர்கள் .ஸ்டாலின் அவர்களே அதிமுகவில் எந்த தொண்டனும் அடிமை இல்லை. நாங்கள் சொந்தக்காலில் சொந்த உழைப்பில் நிற்கிறோம் . ஆனால் அதிமுக கூட்டணி கட்சி மாறுகிறது எனக் கூறுகிறீர்கள். எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் எந்த கட்டுப்பாடோடு கட்சி நடத்தினார்களோ அதே கட்டுப்பாடோடு தற்போது வரை அதிமுக இருக்கிறது. எப்போதும் எங்கள் கூட்டணியில் அங்கும் வகிப்பவர்கள் சுயமரியாதையோடு நடத்துகின்றோம்.
கொடி பறக்கிறது தெரிகிறதா எப்படி காற்றுதான் காரணம் காற்று கண்ணுக்கு தெரிகிறதா. இல்லை அது போல தான் திமுக ஊழலை செய்து வருகிறது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு.
திமுகவும் பாஜகவும் கூட்டணி வைக்கவில்லையா வெற்றியடையவில்லையா. ((வாஜ்பாயுடன் கருணாநிதி . முரசொலி மாறன் இருக்கும் புகைப்படத்தை காண்பிக்கிறார்.)) எங்கள் கூட்டணியை கண்டு ஸ்டாலினுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுக ஆட்சியில் தான் நடந்தது. தமிழத்தை தலைகுனிய விட மாட்டோம் என்கிறார்கள். ஏற்கனவே தலை குனிந்து விட்டோம்.
விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் அம்மா உணவகத்தில் உணவு, வீடு தேடி முதியோர்களுக்கு என 7 லட்சம் பேருக்கு உணவு கொடுத்தோம். கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். கட்டுமான பொருட்கள் விலை உயர்வுக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தோம். வீட்டு வரி, தண்ணீர் வரி, தற்போது குப்பைக்கும் வரி,
இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் மாதத்தில் 5400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தது அதிமுக அரசுதான்.
ராமநாதபுரத்தில் அப்துல் கலாம் பெயரில் கல்லூரி அதிமுக ஆட்சியில் துவக்கி வைக்கப்பட்டது. சிறுபான்மையினர் மக்களுக்கு அதிக திட்டங்களை கொடுத்ததும் அதிமுக தான். ஹஜ் / ஜெருசலேம் பயணத்திற்கு அதிக நிதி கொடுத்ததும் அதிமுக தான்.
இவ்வாறு அவர் பேசினார்.