Close Menu
    What's Hot

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தல் – உருவானது உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!
    இந்தியா

    மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தல் – உருவானது உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    uddav thackarey
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா மாநகராட்சித் தேர்தலை இணைந்து எதிர்கொள்ளப் போவதாக சிவ சேனா (உத்தவ் தாக்கரே), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கூட்டாக அறிவித்துள்ளன.

    மகாராஷ்டிராவின் முக்கிய மாநில கட்சிகளாக சிவ சேனா (யுபிடி), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை விளங்கி வருகின்றன. உத்தவ் தாக்கரேவுக்கும் ராஜ் தாக்கரேவுக்கும் இடையே இருந்த பகை காரணமாக இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டு வந்தன.

    இந்நிலையில், வரக்கூடிய மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தலை கூட்டணி அமைத்து எதிர்கொள்வது என இவ்விரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. இதற்கான அறிவிப்பு மும்பையில் இன்று வெளியிடப்பட்டது. மும்பையில் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர்.

    செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் தாக்கரே, ‘‘இன்று நாங்கள் எங்கள் இருவருக்கும் இடையேயான கூட்டணியை அறிவிக்கிறோம். தேர்தலை இணைந்து எதிர்கொள்வோம். மும்பை மேயர் ஒரு மராத்தியராக இருப்பார். அவர் எங்கள் கட்சிகள் இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தவராக இருப்பார். மேலும், நாங்கள் சரத் பவாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’’ என தெரிவித்தார்.

    உத்தவ் தாக்கரே பேசும்போது, ‘‘நாங்கள் ஒன்றாக இருப்பதற்காக இணைந்துள்ளோம். மும்பையை அபகரிக்க நினைப்பவர்களை நாங்கள் ஒழித்துக் கட்டுவோம். மராத்தி மக்களிடம் நான் சொல்ல விரும்புவது, நீங்கள் இப்போது பிரிந்து சென்றால், நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள். பாஜகவில் நடப்பதைப் பார்க்க சகிக்க முடியாதவர்களும் எங்களுடன் வரலாம்’’ என்று தெரிவித்தார்.

    இந்த கூட்டணி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கது என சிவ சேனா (யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ‘‘இந்த நாள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இது தாக்கரேக்களின் தலைமைக்கு வழிவகுக்கும். அவர்களால் மட்டுமே மாநிலத்தை வழிநடத்த முடியும்’’ என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோலி, ரோஹித் அதிரடி சதம்! டெல்லி, மும்பை அணிகள் வெற்றி
    Next Article “அரசியல் விரக்தியில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!” – பட்னாவிஸ் தாக்கு
    Editor TN Talks

    Related Posts

    பரபரப்பின் உச்சத்தில் டெல்லி..!! போராட்டங்களுக்கிடையே இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

    July 22, 2026

    டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?

    July 22, 2026

    மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்துகிறது காங்., கட்சி..!! தர்மேந்திர பிரதான் பகீர் குற்றச்சாட்டு..!!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.