Close Menu
    What's Hot

    காரை அதிவேகமாக ஓட்டி வந்த பெண்!. பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வாலிபர்!

    “அஞ்சலி செலுத்தும் இடம் கேளிக்கை கூடாரமாக மாறி விட்டது” – நடிகை  ராதிகா வேதனை

    பாஜக அரசை கண்டிக்கும் அதிமுக; என்.எல்.சி விவகாரத்தில் புது ட்விட்ஸ்ட்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பூதாகரமானது ரூ.100 கோடி மோசடி வழக்கு..!! Ex.அமைச்சர் சிவசங்கருக்கு பறந்த சம்மன்..!!
    Featured

    பூதாகரமானது ரூ.100 கோடி மோசடி வழக்கு..!! Ex.அமைச்சர் சிவசங்கருக்கு பறந்த சம்மன்..!!

    editor5By editor5June 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 33 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் பெயரைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியன் என்பவருக்கு முன்னாள் அமைச்சருடன் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த சிவசங்கரின் நேர்முக உதவியாளர் எனக் கூறிக்கொண்ட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளஞ்செழியன், சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ. சீனிவாசன் என்பவரை அணுகினார். தனது மகனுக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) பணி பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து, 2023 முதல் 2025 வரை படிப்படியாக ரூ.25 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஆனால் வாக்குறுதிப்படி வேலை கிடைக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தராமல், பணத்தைத் திருப்பிக் கேட்ட சீனிவாசனை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சீனிவாசன் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து இளஞ்செழியனை அதிரடியாகக் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இளஞ்செழியனிடமிருந்து இரண்டு தமிழ்நாடு அரசு அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒன்றில் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் என்றும், மற்றொன்றில் நுங்கம்பாக்கம் மாவட்டக் கல்வி அதிகாரி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அட்டைகள் உண்மையானவையா அல்லது போலியானவையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபோன்ற மோசடியில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இளஞ்செழியன் தனது தாயை சிவசங்கரின் ஆசிரியை என்றும், முன்னாள் அமைச்சருடன் பலமுறை தொலைபேசியில் பேசியதே தனக்கு நம்பிக்கை அளித்ததாகவும் புகாரில் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், தலைமைச் செயலகத்தில் சிவசங்கரை நேரில் சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார். “கொடுத்த பணம் வந்து சேர்ந்துவிட்டது” என சிவசங்கர் இளஞ்செழியனுக்கு உறுதி அளித்ததாகவும் எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இளஞ்செழியன் யார் என்றே தனக்குத் தெரியாது, அவரைத் தனது உதவியாளராக நியமித்ததில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் எனக் கேள்வி எழுப்பியிருந்த சிவசங்கரின் பெயர் இப்போது மோசடி வழக்கில் சிக்கியுள்ளது திமுகவுக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தின் முழு உண்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ex minister sivashankar summon
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பூர் ரோட்டரி சங்க நிகழ்வால் பரபரப்பு ;  செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்வில் மது, மாது என அலப்பறை?
    Next Article விழுந்தது 6-வது விக்கெட்; அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா?
    editor5

    Related Posts

    காரை அதிவேகமாக ஓட்டி வந்த பெண்!. பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வாலிபர்!

    June 29, 2026

    “அஞ்சலி செலுத்தும் இடம் கேளிக்கை கூடாரமாக மாறி விட்டது” – நடிகை  ராதிகா வேதனை

    June 29, 2026

    பாஜக அரசை கண்டிக்கும் அதிமுக; என்.எல்.சி விவகாரத்தில் புது ட்விட்ஸ்ட்

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காரை அதிவேகமாக ஓட்டி வந்த பெண்!. பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வாலிபர்!

    “அஞ்சலி செலுத்தும் இடம் கேளிக்கை கூடாரமாக மாறி விட்டது” – நடிகை  ராதிகா வேதனை

    பாஜக அரசை கண்டிக்கும் அதிமுக; என்.எல்.சி விவகாரத்தில் புது ட்விட்ஸ்ட்

    பதவியை ஏற்க அல்ல… பொறுப்பை ஏற்கச் செல்கிறேன் – மாணிக்கம் தாகூர் ட்விட்

     ஆனைமலை குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து!. கரும்புகையால் மக்கள் தவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.