Close Menu
    What's Hot

    சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்..!! ஜூலை 31 முதல் கடைகளில் விற்கப்படாது..!! வணிகர்கள் சொல்லும் காரணம் என்ன?

    “நான் யார் தெரியுமா?”. பதவி விலகலுக்குபின் தர்மேந்திர பிரதான் சொன்ன மாஸ் பன்ச்!

    அக்.15ம் தேதி! ‘வீ த லீடர்ஸ்’ சார்பில் ‘அரசியல் அறநெறி மையம்’ தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதலமைச்சர் தனிப்பிரிவு முன் அவசர பாதுகாப்பு ஏற்பாடு..!! தீயணைப்பு வீரர்கள் நியமனம்!
    Featured

    முதலமைச்சர் தனிப்பிரிவு முன் அவசர பாதுகாப்பு ஏற்பாடு..!! தீயணைப்பு வீரர்கள் நியமனம்!

    editor5By editor5July 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 28 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை தலைமைச் செயலகத்தில் தீக்குளிப்பு உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தீ விபத்து தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் அளித்த புகார்களுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தினந்தோறும் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க வருகின்றனர். இதில் சிலர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக திடீரென தீக்குளிப்பு போன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, மனு அளிக்க வந்த பெண் ஒருவர் குடிநீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் கொண்டு வந்து, முதலமைச்சர் தனிப்பிரிவு வளாகம் அருகே தனது உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமைச் செயலகம் போன்ற உயர் பாதுகாப்பு வளாகத்திற்குள் எரிபொருளுடன் நபர் ஒருவர் வந்தது பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியது.

    இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண் இன்று திடீரென தனது சேலையில் தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் தீயை அணைக்க முயன்றனர். போதுமான உபகரணங்கள் இல்லாத நிலையில், பெண் காவலர்கள் சிலர் கைகளால் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தலைமைச் செயலக பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து முதலமைச்சர் தனிப்பிரிவு நுழைவுப் பகுதியில் தீயணைப்பு வீரர் ஒருவர் நிரந்தர பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் கார்பன் டை ஆக்சைடு தீயணைப்பான், தண்ணீர் வாளிகள் மற்றும் தீயை அணைக்க பயன்படுத்தப்படும் ஈரத் துணிகள் உள்ளிட்ட அவசரகால உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், தலைமைச் செயலகத்திற்குள் வரும் பொதுமக்களை முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    fire fighters tn secretariat
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா!. 2024 சட்டத்திற்கும் புதிய 2026 மசோதாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்!. 
    Next Article நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்…  விஜய்யை கடுமையாகச் சாடிய கோகுல இந்திரா!
    editor5

    Related Posts

    சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்..!! ஜூலை 31 முதல் கடைகளில் விற்கப்படாது..!! வணிகர்கள் சொல்லும் காரணம் என்ன?

    July 27, 2026

    “நான் யார் தெரியுமா?”. பதவி விலகலுக்குபின் தர்மேந்திர பிரதான் சொன்ன மாஸ் பன்ச்!

    July 27, 2026

    அக்.15ம் தேதி! ‘வீ த லீடர்ஸ்’ சார்பில் ‘அரசியல் அறநெறி மையம்’ தொடக்கம்!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்..!! ஜூலை 31 முதல் கடைகளில் விற்கப்படாது..!! வணிகர்கள் சொல்லும் காரணம் என்ன?

    “நான் யார் தெரியுமா?”. பதவி விலகலுக்குபின் தர்மேந்திர பிரதான் சொன்ன மாஸ் பன்ச்!

    அக்.15ம் தேதி! ‘வீ த லீடர்ஸ்’ சார்பில் ‘அரசியல் அறநெறி மையம்’ தொடக்கம்!

    நாடாளுமன்ற விதி 267… எதிர்க்கட்சிகளின் அடுத்த குறி அமித் ஷா!

    ஆய்வுக்காக ஸ்கூட்டியில் பறந்து வந்த அமைச்சர் ஆனந்த்..!! காரணம் இதுதான்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.