மும்பையில் பிரியாணிக்கு பின் தர்ப்பூசணி உண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பைதோனி பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல்லா – நஸ்ரீன் தம்பதி. இவர்களுக்கு ஆயிஷா, ஷைனப் என இரு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அப்துல்லா வீட்டுக்கு உறவினர்கள் வந்துள்ளனர். இரவு 10.30 மணியளவில் உறவினர்களுடன் சேர்ந்து அப்துல்லா குடும்பத்தினர் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.
உறவினர்கள் சென்ற பிறகு, அப்துல்லா குடும்பத்தினர் நள்ளிரவு 1 மணியளவில் தர்பூசணி சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 4 பேருக்கும் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாந்து, வயிற்றுப்போக்கால் அவதியடைந்தவர்கள், தங்களது குடும்ப மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்டமாக தர்பூசணி விஷத் தன்மையாக மாறியதால் இந்த துயரன் நேர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
