ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள், இரண்டாம் கட்ட சுற்றுகள் முடிந்து 3-ம் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அப்படி நடைபெற்ற 3-ம் கட்ட சுற்றின் 89-வது போட்டியில் பராகுவே அணியும், பிரான்ஸ் அணியும் மோதின.
அதிகாலை 2.30 மணிக்கு அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயன்றும் பலனில்லாமல் போனது.
2-வது பாதியில் பிரான்சின் கைலியன் எம்பாப்பே 70-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் இத்தொடரில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் மெஸ்ஸியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார் எம்பாப்பே. இதனால், 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் முன்னிலையில் இருந்தது. அதன் பின்னும் இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோல் அடிக்க முயன்றும் அடிக்கமுடியாமல் போனதால், பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
