பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பிரதமர் மோடிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி பிரியாவிடைச் செய்தியை வழங்கினார். இந்தியில் பேசிய அவர், பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டியதோடு, இந்தியாவிற்கு வருகை தரும் தனது திட்டங்களையும் வெளிப்படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம், இரு நாடுகளுக்கிடையிலான “சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை  உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. தனது பயணத்தின் நிறைவாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடிக்கு ஹிந்தியில் உருக்கமான விடைகொடுப்பு செய்தியை வெளியிட்டு அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

https://x.com/ANI/status/2067644225437708651?

பயணத்தின் நிறைவில், அதிபர் மேக்ரான் ஹிந்தியில் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “பிரிய மித்ர நரேந்திர, தங்களின் வருகையை நீஸ், எவியன் மற்றும் பாரிஸில் வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா – பிரான்ஸ் இடையிலான இந்த நட்பு என்றும் நிலைத்திருக்கட்டும்” என்று ஹிந்தியில் பேசி, பின்னர் “நான் சரியாகச் சொன்னேன் என்று நம்புகிறேன்” எனச் சிரித்தவாறு குறிப்பிட்டார். மேலும், “பிரான்ஸ் உங்களை நேசிக்கிறது, அடுத்த பிப்ரவரி மாதம் மீண்டும் உங்களைச் சந்திக்க ஆவலாக உள்ளேன், ஜெய் ஹிந்த்” எனத் தனது அன்பை வெளிப்படுத்தினார்.

முக்கிய அம்சங்கள்: பாரிஸில் நடைபெற்ற ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட்-அப் கண்காட்சியான ‘VivaTech 2026’ மாநாட்டில் பிரதமர் மோடியும், அதிபர் மேக்ரானும் பங்கேற்றனர். இம்மாநாட்டில் இந்தியா ‘AI Country Partner’-ஆகச் செயல்பட்டது.

கண்காட்சியில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கை இரு தலைவர்களும் பார்வையிட்டனர். செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளித் தொழில்நுட்பம், மற்றும் ஸ்டார்ட்-அப் கண்டுபிடிப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளன.

பாரிஸில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை எடுத்துரைத்தார். மொபைல் உற்பத்தி, ஏற்றுமதி அதிகரிப்பு, மற்றும் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது என இந்தியாவின் பொருளாதார சாதனைகளை அவர் பட்டியலிட்டார்.

தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றுவது ஒரு பாக்கியம் எனக் குறிப்பிட்ட மோடி, “ஒரு தேநீர்க்கடைக்காரர் நாட்டின் பிரதமராக உயர்ந்திருப்பது இந்தியாவின் ஜனநாயகத்தின் பலம்” எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்த முக்கியப் பயணம், தொழில்நுட்பம், ராணுவம் மற்றும் விண்வெளித் துறைகளில் இந்தியா-பிரான்ஸ் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version