2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘A’ பிரிவு ஆட்டத்தில் மெக்ஸிகோ மற்றும் தென் கொரியா அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் மெக்ஸிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.

குவாடலஜாராவில் உள்ள எஸ்டேடியோ அக்ரான் (Estadio Akron) மைதானத்தில் நடைபெற்றது. மெக்ஸிகோ சொந்த மண்ணில் விளையாடிய உற்சாகம் அந்த அணியின் ஒவ்வொரு நகர்விலும் வெளிப்பட்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் திணறின. பின்பு ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில், தென் கொரிய கோல்கீப்பர் கிம் சூங்-கியூ, பந்தைப் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட தவறைப் பயன்படுத்திக்கொண்ட மெக்ஸிகோ வீரர் லூயிஸ் ரோமோ, கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் தென் கொரியா அணி கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தது. குறிப்பாக, 87-வது நிமிடத்தில் சோ கு-சுங் தலையால் முட்டிய பந்தை, மெக்ஸிகோ கோல்கீப்பர்  ரவுல் ரஞ்செல்   அபாரமாகத் தடுத்து நிறுத்தினார். இந்த வெற்றியின் மூலம், மெக்ஸிகோ அணி ‘A’ பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றான ‘Round of 32’-க்குத் தகுதியைப் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version