Close Menu
    What's Hot

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! கடலூரில் 29-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!

    எங்களைத் தடுத்தால் உலக எண்ணெய் சந்தையே முடங்கும்..!! ஈரான் வார்னிங்..!!

    காவல் சித்திரவதை மரணங்களுக்கு எதிராக எப்பொழுதும் குரல் கொடுப்போம்  – அமைச்சர் வன்னியரசு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அதிகரித்த ஆன்லைன் ட்ரோல்.. இன்ஸ்டா-வை விட்டு வெளியேறிய தர்மேந்திர பிரதான் மகள்!
    Featured

    அதிகரித்த ஆன்லைன் ட்ரோல்.. இன்ஸ்டா-வை விட்டு வெளியேறிய தர்மேந்திர பிரதான் மகள்!

    editor5By editor5July 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 37 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையால் நாடு முழுவதும் கொந்தளித்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஜென்சி மாணவர்களின் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, அமைச்சரின் மகள் நைமிஷா பிரதான் அமெரிக்காவில் உயர்தரக் கல்வி பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நைமிஷா பிரதான், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்துள்ளார். தற்போது டெல்லியில் அமெரிக்க-இந்திய கூட்டாண்மை மன்றத்தில் மூத்த நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் கோபத்துடன் அவரை விமர்சிக்கத் தொடங்கினர்.

    “நாட்டின் கல்வி முறையை வடிவமைக்கும் அமைச்சர், தன் மகளை வெளிநாட்டில் உயர்தரப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்திருக்கிறார். ஆனால் இந்திய மாணவர்களுக்கு நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்யத் தவறிவிட்டார்” என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் நைமிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாயிரக்கணக்கான கண்டனப் பதிவுகள் வெளியானதால், அவர் தனது கணக்கை நிரந்தரமாக நீக்கி வெளியேறியுள்ளார்.

    நீட் தேர்வு வினாத்தாள் இதுவரை மூன்று முறை கசிந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுதேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அமைதியாக இல்லை. டெல்லியில் தினசரி தீவிரமடையும் போராட்டத்தில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. மத்திய அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்தாலும், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

    இந்தச் சூழலில், அமைச்சரின் தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்களை, குறிப்பாக மகளை இலக்கு வைத்து சைபர் புல்லிங் செய்வது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. பல நெட்டிசன்கள், “அமைச்சரின் கொள்கைகளையும் முடிவுகளையும் விமர்சிக்கலாம். ஆனால் அவரது குடும்பத்தினரை, குறிப்பாக பிள்ளைகளைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது நியாயமற்றது. தலைவரை விமர்சியுங்கள், குடும்பத்தை அல்ல” எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

    தற்போது டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. மத்திய அரசு சிறு தவறு செய்தாலும் போராட்டம் நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளதால், சிக்கலை உன்னிப்புடன் கையாள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியக் கல்வித் துறையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    Dharmendra Pradhan NEET protest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொடர் போராட்டத்தால் பதற்றத்தில் தலைநகர் டெல்லி..! தீர்வு காணாவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும்..! தலைமை நீதிபதி எச்சரிக்கை..!
    Next Article இந்திய ராணுவத் தளபதி அலுவலகத்தில் மத அடையாளம்… சர்ச்சைக்குரிய தர்மா ஓவியம் அகற்றம்
    editor5

    Related Posts

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! கடலூரில் 29-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!

    July 23, 2026

    எங்களைத் தடுத்தால் உலக எண்ணெய் சந்தையே முடங்கும்..!! ஈரான் வார்னிங்..!!

    July 23, 2026

    காவல் சித்திரவதை மரணங்களுக்கு எதிராக எப்பொழுதும் குரல் கொடுப்போம்  – அமைச்சர் வன்னியரசு

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! கடலூரில் 29-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்..! இபிஎஸ் அறிவிப்பு..!

    எங்களைத் தடுத்தால் உலக எண்ணெய் சந்தையே முடங்கும்..!! ஈரான் வார்னிங்..!!

    காவல் சித்திரவதை மரணங்களுக்கு எதிராக எப்பொழுதும் குரல் கொடுப்போம்  – அமைச்சர் வன்னியரசு

    “ஜனநாயகத்தைக் காப்போம்”: மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்!

    கேரளத்தில் கொந்தளித்த மாணவர்கள்… தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்த போலீஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.