சென்னையில் கடந்த சில நாட்களாகக் கணிசமாகக் குறைந்து வந்த தங்கம் விலை, இன்று (ஜூன் 12) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று ஜூன் 11 நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து ரூ.13,500-க்கும், சவரனுக்கு ரூ.2,400 வரை சரிந்து ரூ.1,08,000-க்கும் விற்பனையானது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.5,600 வரை சரிந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் அந்த வீழ்ச்சியை ஈடுசெய்யும் வகையில் விலை பெரும் ஏற்றத்தைக் கண்டுள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.13,800-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்து ரூ.1,10,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.265-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது. உலகளாவிய பொருளாதாரக் காரணிகளால் தங்கம் விலை ஒரே நாளில் இந்த அளவிற்கு மீண்டும் அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version