கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை, புதிய மாதத்தின் தொடக்க நாளான இன்று அதிரடியாகக் குறைந்து ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (ஜூன் 1) ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகச் சரிந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.130 குறைந்து, ரூ.14,500-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வந்த தங்கம் விலை, ஜூன் மாதத்தின் முதல் நாளான இன்றே சரிவைச் சந்தித்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.வெள்ளி  1 கிராம் ரூ. 290-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ரூ. 2,90,000-க்கும் விற்பனையாகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version