தமிழக ஆளுநர் மாளிகையில் மே 30-ம் தேதி திருவள்ளுவர் திருநாள் கழகம்’ சார்பில் வைகாசி அனுஷம் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில், திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்த படம் பயன்படுத்தப்பட்டது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவியும் அதே காவி உடை படத்தைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
https://x.com/lokbhavan_wb/status/2060959548534575492
முன்னாள் தமிழக ஆளுநரும், தற்போதைய மேற்கு வங்க ஆளுநருமான ஆர்.என். ரவி விடுத்துள்ள எக்ஸ் பதிவில் திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் பெருமைகளைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “திருக்குறளில் தர்மமும், அறமும் மிக ஆழமாகச் சங்கமிக்கிறது. அது மனிதர்களுக்குத் தனிமனித ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு அறநெறி சார்ந்த ஆட்சி முறைக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கிறது. பாரதத்தின் ஆன்மீகப் பரிணாமத்தை வளப்படுத்துவதில் திருக்குறளின் பங்கு அளப்பரியது என்று பதிவிட்டுள்ளார்.
