21-ம் நூற்றாண்டின் உலகளாவிய தலைசிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை பிரபல விளையாட்டு ஊடகமான ESPN வெளியிட்டுள்ளது. இதில் உலகின் முன்னணி ஜாம்பவான்கள் பலரை பின்னுக்குத் தள்ளி, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆல்-ரவுண்டர் ஜாக் காலிஸ் (Jacques Kallis) முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான ரேஸில் முதல் ஐந்து இடங்களில் முதலிடத்தில், ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா), 2வது இடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிடித்துள்ளார். 3வது இடத்தில் விராட் கோலி, 4வது இடத்தில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன், 5வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் உள்ளார்.

உலக அளவில் தேர்வு செய்யப்பட்ட டாப் 25 சிறந்த வீரர்களின் பட்டியலில் இந்திய அணி வீரர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. சச்சின், கோலியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் தூண்களாக விளங்கிய மேலும் 5 நட்சத்திர வீரர்கள் இப்பட்டியலில் இணைந்துள்ளனர். அதாவது, ராகுல் டிராவிட், எம்.எஸ். தோனி, ஜஸ்பிரித் பும்ரா, வீரேந்தர் சேவாக், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும், இந்திய அணியின் கேப்டனாகவும் திகழும் ரோஹித் சர்மாவின் பெயர் இந்த டாப் 25 பட்டியலில் இடம் பெறவில்லை. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் இமாலய சாதனைகளைப் படைத்த ஜாக் காலிஸுக்கு இந்த நூற்றாண்டின் தலைசிறந்த வீரர் என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது கிரிக்கெட் உலகினரால் வரவேற்கப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version