தகாத உறவில் இருந்த மனைவியை வெட்டி விட்டதாகவும் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்வதாகவும் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ வெளியிட்ட கணவரைக் கைது செய்துள்ளனர்.

தனது மனைவி திருச்சியை சேர்ந்த ஜோஸ் என்பவருடன் தகாத உறவில் இருப்பதை கையும் களவுமாகக் கண்டுபிடித்ததோடு அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இளைஞர், அதன் பின்னர் தனது மகனைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய இருப்பதாக கண்ணீருடன் வீடியோ பதிவிட்டார். அந்த வீடியோவில் சிறுவன் எனக்கு பயமா இருக்குப்பா என்று அழுவது காண்போரை எல்லாம் பதைபதைக்க வைத்தது.

இதன் தொடர்ச்சியாக, அந்தப் பெண்ணின் நடத்தை குறித்தும் இளைஞரின் சோகம் குறித்தும் அந்த இளைஞரின் நண்பர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோக்கள் பரபரப்பான நிலையில், அந்தப் பெண்ணுக்கு என்ன ஆனது, தந்தையும் மகனும் என்ன ஆனார்கள் எனப் பலரும் தவித்த நிலையில், இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் டீம் தேடுதல் வேட்டையில் இறங்கியதோடு, அந்த இளைஞரையும் கைது செய்திருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள  மயில்பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்(38) தான் தனது 25 வயது மனைவி குறித்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 6 ஆண்டுகளுக்கு இருவக்குக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு மகன் இருக்கும்போதே மனைவி இப்படி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததைக் கண்டுபிடித்து தர்மராஜ் கண்டித்துள்ளார். ஆனாலும் கேட்காத நிலையில், மனைவியின் முகத்தில் கத்தியால் வெட்டிவிட்டு, மகனுடன் தலைமறைவாகி இருக்கிறார்.

காயம் அடைந்த மனைவி இப்போது தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்லம் பகுதியில் மகனுடன் இருந்த தர்மராஜையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவனை மீட்டு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

தனது மனைவியின் இந்த செயலைத் தாங்கமுடியாமல்தான் இப்படி செய்துவிட்டதாக போலீசாரிடம் தர்மராஜ் அழுது புலம்பியுள்ளார்.

தற்போது மூவரும் நலமாக இருப்பதாகவும், தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் போலீஸ் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version