சென்னை மாவட்ட ஆட்சியரின் சீரிய முயற்சியின் காரணமாக பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் வாயிலாக சென்னை மாவட்டத்தில் உள்ள 18 அரசுப் பள்ளிகளுக்கு ரூ.70லட்சம் செலவில் 900பெஞ்ச், டெஸ்க் வழங்கும் விழா சென்னை எழும்பூர் மாகாண மகளிர் மேநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சென்னை ஆட்சியர் மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்களுக்கு பெஞ்ச், டெஸ்குகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஹூண்டாய்மொபிஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் ஹூமின் ஹோ, நரசிம்மன் தலைவர் பெருநிறுவன சமூக பொறுப்புத்துறை நிகழ்வில் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் விழாவில் நன்றியுரை ஆற்றினார். உடன் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
