Close Menu
    What's Hot

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நண்பரோ, உறவினரோ.. அமைச்சர் பெயரைச் சொல்லி வந்தால் அனுமதிக்காதீர்..! சம்பத்குமார் தடாலடி..!!
    Featured

    நண்பரோ, உறவினரோ.. அமைச்சர் பெயரைச் சொல்லி வந்தால் அனுமதிக்காதீர்..! சம்பத்குமார் தடாலடி..!!

    editor5By editor5July 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 19 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) திமுக மற்றும் அதிமுகவை தோற்கடித்து ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய், “லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை வழங்குவோம்” என உறுதியளித்துள்ளார்.

    இந்நிலையில், கோவை மாவட்ட அமைச்சர்களான சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தொழில்துறையினருடன் முக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினர். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தொழில் மற்றும் வணிக சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    கோவையின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி, போக்குவரத்து நெரிசல் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. தவெக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தொழில்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

    அமைச்சர் சம்பத்குமார் பேசுகையில், “லஞ்சம், ஊழலற்ற அரசு நிர்வாகத்தை உருவாக்கினாலே நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும். இதற்கு தொழில்துறையினர் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். அமைச்சரின் நண்பர், உறவினர் என்று யார் வந்தாலும் அவர்களை தள்ளி வைக்க வேண்டும். எங்கள் பெயரைச் சொல்லி யாரும் எந்த சலுகையும் பெற முடியாது” என்று தெளிவுபடுத்தினார். மேலும், “10 நாட்கள் வேலை 2 நாட்களில் முடிக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் செல்லக் கூடாது” என்றும் அவர் எச்சரித்தார்.

    தொழில்துறையினர் சார்பில், கோவையில் கடைகள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி, ஒண்டிப்புதூர் பகுதியில் திட்டமிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை போக்குவரத்து நெரிசல் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றுதல், மத்திய பல்கலைக்கழகம் அமைத்தல், புறவழிச் சாலைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் ஆகியவை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    அமைச்சர் இதற்கு உறுதியளித்து, “முதலமைச்சர் ஜோசப் விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவாணி அணையை சீரமைக்க கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கோவை மாநகரின் 100 வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் சீர்படுத்தப்படும்.

    மேற்கு புறவழிச்சாலை இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப் பணிகள் விரைவில் தொடங்கும். லாஜிஸ்டிக் பார்க், மூலப்பொருள் வங்கி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஐடி மற்றும் ஏஐ துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தி கோவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்” என்றார். இந்த சந்திப்பு, தவெக அரசின் ஊழலற்ற மற்றும் வளர்ச்சி மையப்படுத்திய நிர்வாகத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

    Minister sampath kumar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாறும் மாஞ்சோலை… எஸ்டேட் அடையாளங்கள் அழிப்பு; மீண்டும் காடாகும் மலைப்பகுதி!
    Next Article 3 நாடுகளை நோக்கி.. தொடங்கியது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்று பயணம்..!!
    editor5

    Related Posts

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    July 19, 2026

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    July 19, 2026

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.