முதலமைச்சர் ஜோசப் விஜய் குதிரைப்பேரத்தில் ஈடுபடுவதை வைகோவின் பேட்டி அம்பலப்படுத்தியிடுப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  செய்தியாளர்களிடம் பேசியபோது, சென்னை கோட்டையில், தான்  முதலமைச்சர் விஜய்யை சந்தித்தபோது அவர் கூறியதாக தெரிவித்தது குதிரைப்பேரத்துக்கான ஆதாரம் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரண்டு மதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்லி, தவெக-வில் இணையுமாறு தமிழ்நாடு முதலமைச்சர்,  தன்னிடம் பேசியதாக வைகோ வெளிப்படையாகவே பேட்டியளித்துள்ளார். இது அப்பட்டமான குதிரைப் பேரம் அல்லவா? என இன்பதுரை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் தவெக அரசு நடத்திவரும் குதிரைப் பேர அரசியலை நிரூபிக்க – வைகோ அளித்துள்ள இந்த ஒப்புதல் வாக்குமூல பேட்டி ஒன்று போதாதா என வினா எழுப்பியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version