நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகத் டெல்லியில் நாடாளுமன்றத்தில் இருந்து பேரணியாகச் செல்ல முயன்ற ‘இந்தியா’ கூட்டணி எம்பி-க்களின் போராட்டத்தைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும், CJP கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எம்பி-க்கள் டெல்லியில் காந்தி நினைவிடம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர்.

பேரணிக்கு முறையான அனுமதி அளிக்கப்படவில்லை எனக் கூறி, டெல்லி காவல்துறையினர் வழியெங்கும் தடுப்புகளை அமைத்து ராகுல் காந்தி மற்றும் ‘இந்தியா’ கூட்டணி எம்பி-க்களின் போராட்டத்தைக் கார்டன் வீதியில் தடுத்து நிறுத்தினர். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நீட் வினாத்தாள் கசிவு குறித்து மத்திய அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும், அமைதியான முறையில் பேரணி நடத்த முயன்ற எம்பி-க்களைத் தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

இதுபற்றிய பேசிய ராகுல் காந்தி, மாணவர்கள் வீதியில் இருப்பதால், நாங்களும் வீதியில் இறங்க வேண்டும் என்று எம்பி-க்கள் நினைத்ததன்பேரில், பேரணியாக சென்றதாக தெரிவித்தார்.  ஆனால், தடுத்து நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்ட அவர், முன்னேறிச் செல்ல முடியவில்லை என்றார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் எப்போதும் உள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version