நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி இளைஞர்களுக்கு ஆதரவாக மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சிஜேபி இளைஞர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல முயன்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப்படைப்பாளிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் மம்மூட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இளைஞர்களே நம் நாட்டின் உண்மையான செல்வம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களின் குரலுக்குச் செவிசாயுங்கள். அவர்களைப் பாதுகாத்திடுங்கள். அவர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள் என்று கூறியுள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கோரிக்கைகளை அரசு கேட்க வேண்டும் என மம்முட்டி வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version