ரான் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதற்கு அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், போர் நிறுத்தம் இனி நடைமுறையில் இல்லை என்பதை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி ஈரானிடம் தெளிவுபடுத்தியுள்ளோம்” என்று  குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்பான பிரச்சினை மற்றும் அண்மைய தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்கா–ஈரான் உறவு மீண்டும் பதற்றமடைந்துள்ளது. சமீபத்திய தாக்குதல்களில் ஈரானின் பல முக்கிய ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகள் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலடியாக பஹ்ரைன், கத்தார், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரானும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், பேச்சுவார்த்தை தொடரும் சூழல் உருவாகியிருந்தாலும், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக டிரம்ப் உறுதிப்படுத்தியிருப்பது மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version