தமிழகத்தில் தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்குப் பாரதிய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழகத்தில் ரீல்ஸ் மாடல் ஆட்சி நடத்தி வரும் தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களையும் குறைகளையும் சுட்டிக்காட்டிய யூடியூபர் மாரிதாஸ் மீது காவல்துறையினர் மேற்கொண்ட கைது நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

ஜனநாயகத்தில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். ஆனால் அந்த உரிமையை ஒடுக்குவதற்காக கைது நடவடிக்கைகளை ஆயுதமாக பயன்படுத்துவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்.

கடந்த ஆட்சிக் காலத்திலும் அரசின் தவறுகளை வெளிச்சமிட்டுக் காட்டியவர்களை கைது செய்து, சமூக ஊடக விமர்சகர்களை அச்சுறுத்திய திமுக அரசின் பாணியையே தற்போது தவெக அரசும் பின்பற்றுகிறது.

கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் மதிக்காமல் விமர்சன குரல்களை ஒடுக்க முயல்வது எந்த அரசுக்கும் ஏற்றதல்ல. விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது பதில்களால்.. கைது நடவடிக்கைகளால் அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version