Close Menu
    What's Hot

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தடை.. அதை உடை..!! ஒருவழியா.. ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு..!!
    Featured

    தடை.. அதை உடை..!! ஒருவழியா.. ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு..!!

    editor5By editor5July 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 31 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையே தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. பிரபல இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜூ உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன்பாக வெளியாகும் கடைசி திரைப்படம் என்ற தகவல் வெளியானதையடுத்து, ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படம், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான காரணங்களால் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். படத்தின் வெளியீடு தாமதமான நிலையில், இணையத்தில் படத்தின் முழு பதிப்பு சட்டவிரோதமாக வெளியானதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக படக்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டு, இணையத்தில் படத்தை வெளியிட்டவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் படத்தின் வெளியீட்டுக்கான முக்கியமான தடைகள் நீங்கிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் மீண்டும் உற்சாகம் ஏற்பட்டது.

    https://x.com/KvnProductions/status/2077324861123555408?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2077324861123555408%7Ctwgr%5E41258e58476a5d449006a75e4fe7b75422df3993%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2Fcinema%2Fcinemanews%2Fjananayagan-starring-minister-vijay-to-be-released-on-the-23rd

    தணிக்கை சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’, அரசியல் பின்னணி மற்றும் சமூக கருத்துகளை மையமாகக் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு விஜய்யை மீண்டும் வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    jananayagan Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎத்தனை பொய் கதைகளை பரப்பினாலும்… கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக நிற்கும்!. அமைச்சர் ரமேஷ்!
    Next Article கருப்பை வாய் கேன்சருக்கு கிடைக்கப்போகும் தீர்வு..!! கர்நாடக அரசு அதிரடி ஆக்ஷன்..!!
    editor5

    Related Posts

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    July 15, 2026

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    July 15, 2026

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    காமராஜரை சொந்தம் கொண்டாடும் தவெக.. இது பொருத்தமில்ல..!! ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..!!

    தமிழகத்துக்கு மேலும் 150 எம்பிபிஎஸ் இடங்கள்… மருத்துவக் கல்வியில் தொடர்ந்து முன்னிலை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.