தவெக தலைவர் விஜய் பதவியேற்க காலதாமதமின்றி அனுமதிக்க வேண்டும் என தமிழக ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ ஆட்சி அமைக்கும் வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி தவெகவை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தவெக தலைவர்  சி. ஜோசப் விஜய் மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார்.

ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடந்து கொள்வது, தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற அணுகுமுறையை பிஜேபி கடைபிடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு ஆளுநர், விஜய்யை அவரை பதவியேற்க அழைக்காமல் காலம் கடத்தி வருகிறார். இது ஏற்புடையதல்ல.

எனவே, வேறு யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் சி.ஜோசப் விஜய்யை தமிழக ஆளுநர் உடனடியாக பதவியேற்க அழைப்பு விடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version