கரூர் கோவில் இனாம் நில பிரச்சனைக்கு தீர்வு கண்டதாக எம்.பி. ஜோதிமணிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் கோவில் இனாம் நில பிரச்சனையில், பத்திரப்பதிவு தடை நீக்கம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
“கரூர் மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கியவர்” என முதல்வர் சி. ஜோசப் விஜய், எம்.பி. ஜோதிமணிக்கு நன்றி தெரிவித்து அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜோதிமணி எம்.பி. மாரியம்மன் தோற்றத்தில், கையில் சூலாயுதத்துடன் இருப்பது போல் போஸ்டரில் சித்தரிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி படம், காங்கிரஸ் கொடி மற்றும் கட்சி நிர்வாகிகளின் படங்களும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
