10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் கு.செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ளதாவது:-

பத்தாம் வகுப்பு (10th Standard) பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

உங்கள் கடின உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த தகுதியான வெற்றி இது. தேர்வில் தேர்ச்சியடையாத மாணவச் செல்வங்கள் முயற்சி செய்து, படித்து வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

மேல்நிலைக்கல்வி (11th Standard) அல்லது பட்டயப்படிப்பு (Diploma) என உங்கள் எதிர்காலக் கனவை நோக்கிய அடுத்த முக்கியப் படியை எடுத்து வைக்க இதுவே சரியான நேரம். உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ற பாடப்பிரிவைத் தேர்ந்தெடுங்கள்.

உங்கள் வெற்றிக்குப் பின்னால் உறுதுணையாக இருந்த உங்கள் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் குறைந்திருந்தாலோ அல்லது ஏதேனும் பாடத்தில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ கவலைப்பட வேண்டாம். இது ஒரு ஆரம்பம் தான். இன்னும் சாதிக்க பல வாய்ப்புகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன!

உங்களின் எதிர்காலக் கல்விப் பயணம் சிறக்கவும், நீங்கள் நினைத்த இலக்குகளை அடையவும் வாழ்த்துகள்!

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version