கேரள அரசின் 2026-ஆம் ஆண்டுக்கான ஓணம் பம்பர் லாட்டரி சீட்டை முதல்வர் வி.டி. சதீசன் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
இந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.30 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் இந்த லாட்டரியின் விற்பனை வரும் திங்கள்கிழமை முதல் மாநிலம் முழுவதும் தொடங்க உள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த சிறப்பு பம்பர் லாட்டரி மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கானோருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டும் அதிகளவிலான சீட்டுகள் விற்பனை செய்யப்படும் என லாட்டரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
