பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.

ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா எனும் ஊரில் 1938 ஏப்ரல் 23ம் தேதி ராமமூர்த்தி – சத்யவதி தம்பதிகளுக்கு பிறந்தார். தனது இசைப் பயணத்தின் பெரும்பகுதியைத் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் அவர் செலவழித்ததால், ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் தனது குரலால் கட்டிப்போட்ட பெருமைக்குரிய கலைஞராக எஸ்.ஜானகி திகழ்கிறார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வந்த அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில், வயது மூப்பு காரணமாக பாடகி எஸ்.ஜானகி காலமானார்.

1959-ல் வி.ராம்பிரசாத் என்பரை எஸ்.ஜானகி மணந்தார். 1997ல் அவர் ராம்பிரசாத் காலமானார். இவர்களது ஒரே மகன் முரளி கிருஷ்ணா. ஐதராபாத்தில் வசிக்கிறார். அவரது மனைவி உமா முரளிகிருஷ்ணா ஒரு பரதநாட்டிய, குச்சிப்புடி, நடனக் கலைஞர் ஆவார். இவர்களுக்கு வர்ஷா மற்றும் அப்சரா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

தனது தனித்துவமான குரல் வளத்தாலும், உச்சரிப்புத் தெளிவாலும் பல தசாப்தங்களாகத் திரையிசை உலகில் கோலோச்சியவர். 1957-ஆம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகப் பாடி வரும் அவர், ஏறக்குறைய 17 மொழிகளில் தனது குரலைப் பதிவு செய்துள்ளார்.

அவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எஸ்.ஜானகியின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version