மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தமாக செல்போனில் பேசுவது, ஸ்பீக்கர் மோடில் பாடல் அல்லது வீடியோ ஒலிக்கச் செய்வது போன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கையில், “ மெட்ரோ ரயில்​கள் மற்​றும் வளாகங்​களில் செல்​போன் ஒலிபெருக்​கியைப் பயன்​படுத்​து​வது, காதில் ஹெட்போன் (Headphone) பொருத்​திக் கொள்​ளாமல் இசை, வீடியோக்​கள் பார்ப்​பது, செல்​போனில் உரத்த குரலில் பேசுவது ஆகிய செயல்​கள் மூலம் அதிக இரைச்​சலை ஏற்​படுத்​தும் வகை​யில் செல்​போன்​களைப் பயன்​படுத்​து​வதும், மற்​றவர்​களுக்கு இடையூறு விளை​விப்​பதும் தண்​டனைக்​குரிய குற்​ற​மாகக் கருதப்​படும்.

மத்​திய வீட்​டு​வச​தி, நகர்ப்​புற விவ​காரங்​கள் அமைச்​சகம் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளி​யிட்ட அரசிதழ் அறி​விப்​பின்​படி, ‘ஜன் விஸ்​வாஸ் சட்​டம் 2026’-ன் கீழ் ஒரு புதிய திருத்​தம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, மெட்ரோ ரயில் மற்​றும் அதன் வளாகங்​களில் மற்ற பயணி​களுக்கு இடையூறு விளைவிக்​கும் செயல்​களில் ஈடு​படு​வோருக்​கான அபராத தொகை ரூ.500-ல் இருந்து தற்​போது அதி​கபட்​ச​மாக ரூ.2,500 வரை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. மேலும், விதி​களை மீறும் பயணி​கள் அங்​கீகரிக்​கப்​பட்ட அதி​காரி​களால் மெட்ரோ வளாகத்​தில் இருந்து உடனடி​யாக வெளி​யேற்​றப்​பட​வும் வாய்ப்பு உள்​ளது.

எனவே, சக பயணி​களின் பயணச் சூழலைக் கருத்​தில் கொண்​டு, அனை​வரும் மெட்ரோ ரயில் மற்​றும் அதன் வளாகங்​களில் உரத்த குரலில் பேசுவது, ஒலிபெருக்கி பயன்​படுத்​து​வது (ஸ்​பீக்​கர் மோடு) ஆகிய​வற்றை தவிர்த்​து, காதில் பொருத்​திக் கொள்​ளும் ஹெட்போன்களை பயன்​படுத்​து​மாறு கேட்​டுக் கொள்​ளப்​படு​கிறது” எனக்​ கூறப்​பட்​டுள்​ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version