சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று மேடையேறிய பொம்மை முதல்வர் வழக்கம் போல யாரோ எழுதிக் கொடுத்தத்தை வாசித்துக் கொண்டிருந்த போது,
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று மேடையேறிய பொம்மை முதல்வர், வழக்கம் போல யாரோ எழுதிக் கொடுத்ததை வாசித்துக் கொண்டிருந்த போது, 7.5% மருத்துவ உள் இடஒதுக்கீடு திமுக-வின் அழுத்தத்தால் தான் வந்தது போல ஒரு பச்சைப் பொய்யை நாக்கூசாமல் பேசியுள்ளார்.
7.5% உள் இட ஒதுக்கீடு என்பது, அன்றைய தினம் ஆளுநரின் ஒப்புதல் வராத சூழலிலும், அரசியல் திறத்தோடு அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவு அளிக்கும் மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அரசாணை வெளியிட்டு கொண்டு வந்தது.
அதற்கும், நீங்கள் அப்போது ராஜ் பவன் வாசலில் நின்று அவியல் கிண்டியதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? இப்படி, அடுத்தவர் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்கும் புத்தி எப்போது தான் மாறும்? திமுக ஆட்சியில் “இதைச் செய்தேன்” என்று சொல்வதற்கு எந்த உருப்படியான திட்டமும் இல்லாமல், அதிமுக திட்டங்களின் மீது தன் பெயரை எழுதிக் கொள்ளும் இந்தப் போலி பிம்ப அரசியலால் இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றப் போகிறீர்கள் திரு.ஸ்டாலின் அவர்களே? என அதிமுக ஐடி விங் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
“சத்துணவு திட்டம் என்றால் எம்ஜிஆர்”
“தொட்டில் குழந்தைத் திட்டம் என்றால் அம்மா”
“7.5% என்றால் எடப்பாடியார்” இந்த வரலாற்றுப் பெருமையை, எத்தனை கோயபல்ஸ் ஸ்டாலின்கள் வந்தாலும் மறைத்துவிட முடியாது! எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
