தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வாலை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

தமிழ்நாட்டின் டிஜிபியாக இருந்த சந்திப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக மகேஷ் குமார் அகர்வால் புதிய டிஜிபியாக நியமக்கப்பட்டுள்ளார்.

 

தமிழக காவல் துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

1994ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால்  சட்டம் ஒழுங்கு பணியில் மிகவும் அனுபவம் கொண்டவராவார்.

 

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வாலின் தந்தை வழக்கறிஞர் என்பதால், இவரும் ஆரம்பத்தில் சட்டம் படித்துள்ளார். தனது 22 வயதில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய மகேஷ்குமார் அகர்வால் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார்.

 

தேனியில் எஸ்பி-யாக தனது பணியை தொடங்கிய மகேஷ் குமார் அகர்வால் சென்னையில் பூக்கடை காவல்துறை துணை ஆணையராக மூன்று ஆன்டுகள் ஏற்கனவே

 

சென்னை போக்குவரத்து காவல் ஆணையர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளையும் வகித்திருக்கிறார்.  அயல் பணியாக சண்டிகர் சிபிஐயில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தவர் பின்னர் மீண்டும் தமிழ்நாடு காவல்துறைக்கு திரும்பினார். சென்னை மதுரையில் உயர் அதிகாரியாக பணி செய்தார். தொடர்ந்து மத்திய அரசு பணியாக எல்லை பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநராக பணியாற்றியவர் தற்போது தமிழ்நாடு காவல்துறையின் 34-வது டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version