Close Menu
    What's Hot

    தவெகவில் இணைவா..?? ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க..!! பங்கம் செய்த செல்லூர் ராஜு..!!

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. மணக்குள விநாயகர் கோயிலில் தங்க தேர் இழுத்து காங். கட்சியினர் கொண்டாட்டம்!

    எங்களுக்கு இவருதான் தல..! மெஸ்ஸிக்கு புதிய பட்டம்..! ஃபிஃபா வெளியிட்ட புகைப்படம் வைரல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேகதாதுவில் அணை கட்டக்கூடாது.. இதுதான் திமுகவின் நிலைப்பாடு..!! அடித்துச் சொன்ன உதயநிதி ஸ்டாலின்..!!
    Featured

    மேகதாதுவில் அணை கட்டக்கூடாது.. இதுதான் திமுகவின் நிலைப்பாடு..!! அடித்துச் சொன்ன உதயநிதி ஸ்டாலின்..!!

    editor5By editor5June 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 12 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த மேகதாது அணைக்கு எதிரான தனித் தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இத்திட்டத்திற்கு திமுகவின் உறுதியான எதிர்ப்பை வலியுறுத்தினார். “மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதே திமுகவின் தெளிவான நிலைப்பாடு” என்று அவர் தெரிவித்தார்.

    காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதில் திமுகவின் பங்கு முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டிய உதயநிதி, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால அரசியல், சட்டப் போராட்டங்களின் விளைவாகவே காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு உறுதி செய்யப்பட்டதாகக் கூறினார். ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாதத்திற்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேகதாது விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்ததை நினைவுகூர்ந்த அவர், கர்நாடகா அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்தபோது திமுக அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றியதையும், 2021 ஜூன் மாதம் பிரதமருக்கு எதிர்ப்புக் கடிதம் எழுதியதையும் சுட்டிக்காட்டினார்.

    திமுக அரசின் தொடர் முயற்சிகளால்தான் மேகதாது திட்ட அறிக்கை மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் விளக்கினார். மேலும், காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காண புதிய நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய உதயநிதி ஸ்டாலின், மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை முறியடிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதியளித்தார். தமிழக விவசாயிகளின் நீர் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்ற செய்தியும் இந்த விவாதத்தில் எதிரொலித்தது.

    megadatu tnassembly Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை.. பெருசா ஒன்னும் இல்ல..!! போட்டுடைத்த அண்ணாமலை..!!
    Next Article மாற்றுத்திறனாளி பெண்ணிடம் சில்மிஷம்..!! வெளுத்து வாங்கிய அக்கம் பக்கத்தினர்..!!
    editor5

    Related Posts

    தவெகவில் இணைவா..?? ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க..!! பங்கம் செய்த செல்லூர் ராஜு..!!

    June 19, 2026

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. மணக்குள விநாயகர் கோயிலில் தங்க தேர் இழுத்து காங். கட்சியினர் கொண்டாட்டம்!

    June 19, 2026

    எங்களுக்கு இவருதான் தல..! மெஸ்ஸிக்கு புதிய பட்டம்..! ஃபிஃபா வெளியிட்ட புகைப்படம் வைரல்..!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவில் இணைவா..?? ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க..!! பங்கம் செய்த செல்லூர் ராஜு..!!

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. மணக்குள விநாயகர் கோயிலில் தங்க தேர் இழுத்து காங். கட்சியினர் கொண்டாட்டம்!

    எங்களுக்கு இவருதான் தல..! மெஸ்ஸிக்கு புதிய பட்டம்..! ஃபிஃபா வெளியிட்ட புகைப்படம் வைரல்..!

    சட்டசபை லைவ் நிறுத்தம்..!! முதல்வர் விஜய் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது..??

    டெலிகிராம் தற்காலிக தடை..!! மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஹைகோர்ட் அதிரடி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.