தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் தொடர்பாக சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக முட்டையை ஹாப் பாயிலாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது. பறவைகளோ, காகங்களோ திடீரென இறந்து கிடந்தால், அதனை கண்டவர்கள் பறவையை ஆழமாக தோண்டி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோழி திடீரென இறந்தால், அதனை சமைத்து சாப்பிட வேண்டாம். தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மக்களுக்கு பரவவில்லை. எனினும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
