மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு  வைகோவைப் புகழ்ந்து பேசினார்.

தங்களுக்கு, திசை காட்டி, வழிகாட்டி, கலங்கரை விளக்கம் எல்லாம் வைகோதான் எனக் கூறியவர், இந்த புத்தகம் என்பது வைக்கோ என்ற parlementarian-டைய documentation அல்ல; இந்தியா என்ற பெருந்தேசத்தின் நாடாளுமன்றத்தினுடைய சரித்திரத்தின் ஒரு பகுதி இந்த புத்தகம் எனக் குறிப்பிட்டார்.

தனக்கு தெரிந்து, தொண்டர்களின் காசில் வீடு கட்டிய தலைவர்கள் மத்தியில், தலைவர் ஒருவர் தன் காசில் தொண்டர்களுக்கு வீடு கட்டிவர் வைகோ என்றார்.

தான் மட்டும் அமைச்சராக மட்டும் இல்லையென்றால் இந்த அரங்கத்தின் கடைசி வரையில் நின்று அண்ணன் வைக்கோ வாழ்க என்று பார்வையாளனாக வந்திருப்பேன் என துரை வைகோவிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

இங்கு நான் அமைச்சராக இல்லை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் குரலாக, மனசாட்சியாக வந்து நிற்பதாகக் கூறினார்.

முதல்வரின் இதயமும் சிந்தனையும் இங்கேதான் இருக்கிறது; ஏனென்றால் அவர் இதயத்தில் நீங்கள் தான் இருக்கிறீர்கள் என்றும் வைகோவைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

நாடாளுமன்றத்தில் ஒருவர் எப்படி பேச வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, இந்த நாட்டிலேயே ஒருவர் எப்படி பேச வேண்டும் என்பதற்கான பாடபுத்தகத்திற்கு கை கால் முளைத்தால் அதன் பெயர் வைகோ எனக் கூறிய அமைச்சர் ராஜ்மோகன்,

அரசியல் என்பது ஒவ்வொரு நொடி பொழுதும் மாறிக்கொண்டிருக்கிறது. பல்வேறு சம்பவங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்; சில சமயங்களில் அநாகரீகமான தோற்றம் அதை தொட்டு விடுகிறது. ஆனால் ஆயிரம் கோடி கொடுத்தால் கூட அநாகரீகமாக அரசியலில் பேசாத ஒரு மனிதர் இருந்தால் அது வைகோதான் எனப் பெருமிதம் தெரிவித்தார்.

எதை வாங்கலாம் என நினைக்கக்கூடிய மனிதர்கள் மத்தியில், எதை கொடுக்கலாம் என நினைக்கக்கூடிய ஒரு மனிதர் வைகோ எனப் பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version