Close Menu
    What's Hot

    காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

    திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!

    மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்- கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு வலியுறுத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நாங்களும் மனுஷங்க தான்.. எங்களுக்கும் உணர்ச்சி இருக்கு..!! அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்..!!
    Featured

    நாங்களும் மனுஷங்க தான்.. எங்களுக்கும் உணர்ச்சி இருக்கு..!! அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்..!!

    editor5By editor5July 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 32 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாநகராட்சியின் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் சம்பத்குமார், செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, சமீபத்தில் திரையரங்கில் நடைபெற்ற உணர்ச்சிகரமான சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

    “எல்லாரும் மனிதர்கள் தான். எங்களுக்கும் உணர்வுகள் உண்டு. 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் நாங்கள். எங்களையும் தாண்டி நடந்துவிட்டது. இதை அரசியல் செய்யத் தேவையில்லை. திரையரங்குக்குள் தான் அந்த நிகழ்வு நடைபெற்றது” என்று அவர் வலியுறுத்தினார். விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாகவும், அனைவரின் உணர்வுகளையும் மதிப்பதாகவும் தெரிவித்தார்.

    மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. விளையாட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, உள் அரங்கம் கொண்ட மைதானம் திறந்து வைக்கப்பட்டது. திறமையான விளையாட்டு வீரர்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் தற்போதைய அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. உள் அரங்கத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

    சின்ன வேடம்பட்டி சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக மக்களிடையே உள்ள சந்தேகங்களைப் போக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. மண்டல வாரியாகக் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே நகரத்தைத் தூய்மையாக வைக்க முடியும் என்றார். நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் முதல் கட்ட நடவடிக்கையாக இது அமையும். மக்களுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காத திட்டங்கள் இவை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

    54 பணியாளர்கள் முறைகேடாக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுவதாகவும், எந்த அரசியல் அழுத்தமும் இல்லை என்றும் அமைச்சர் விளக்கினார். கடந்த ஆட்சியைப் பற்றி பேச விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார். செம்மொழி பூங்கா தொடர்பாக 40 கோடி ரூபாய் ஊழல் புகார் வந்தால் ஆதாரங்களுடன் விசாரணை நடத்தப்படும் என்றார்.

    பெரியார் நூலகப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் திறப்பு விழா அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 2026-ஆம் ஆண்டு ஆட்சியில் பல்வேறு நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். திறமையான மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

    jananayagan Minister sampath kumar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோராட்டம் இன்னும் முடியல..!! இன்னும் 2 டிமாண்ட் இருக்கு..!! CJP மீண்டும் போர்க்கொடி..!!
    Next Article எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு ஜூலை 26,27-இல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு!  
    editor5

    Related Posts

    காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

    July 26, 2026

    திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!

    July 26, 2026

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

    திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!

    மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்- கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு வலியுறுத்தல்!

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    காவல் நிலைய மரணத்துக்கு முதல்வரிடம் நீதி: அனிதா ராதாகிருஷ்ணனிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.