ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற விராட் கோலி, ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றதுடன் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனைப் பக்கத்தையும் எழுதியுள்ளார்.

அதிக ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்:

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் வென்ற விருதையும் சேர்த்து அவர் 22 முறை ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார்.

இந்த சாதனைப் பட்டியலில் இந்திய வீரர்களில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா – 21 விருதுகள், எம்.எஸ். தோனி – 18 விருதுகள் பெற்றுள்ளனர். அதுமட்டுமன்றி, ஐபிஎல் இறுதிப்போட்டி வரலாற்றில் அதிக வயதில் ஆட்ட நாயகன் விருது பெற்ற 2-வது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி (37 வயது 207 நாட்கள்) பெற்றுள்ளார்.

இப்பட்டியலில் முதலிடத்தில் அனில் கும்ப்ளே உள்ளார். இறுதிப்போட்டியில் அதிக வயதில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 4 வீரர்களின் விவரம்:

அனில் கும்ப்ளே – 38 வயது 210 நாட்கள் (முதலிடம்)

விராட் கோலி – 37 வயது 207 நாட்கள் (இரண்டாமிடம்)

பாப் டு பிளெசிஸ் – 37 வயது 94 நாட்கள் (மூன்றாமிடம்)

ஷேன் வாட்சன் – 36 வயது 344 நாட்கள் (நான்காமிடம்)

37 வயதிலும் சற்றும் குறையாத அதே ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸுடன் விளையாடி, ஆர்சிபி அணிக்குக் கோப்பையையும் வென்று தந்து, இந்த இமாலய சாதனைகளையும் விராட் கோலி தன்வசப்படுத்தியுள்ளார் .

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version