னது தந்தை இயக்குநர் பாக்யராஜ் மறைவையொட்டி முதல்வர் ஜோசப் விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்ததற்காக, நடிகர்  சாந்தனு உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், தனது திருமணத்திற்காக தாலி வழங்கி வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், தற்போது தந்தையின் மறைவின்போது வீட்டிற்கு நேரில் வந்து ஆறுதல் கூறியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.

என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை. அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.

அரசு மரியாதை!

மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறென்ன சொல்ல?

இதயம் கூப்பிய நன்றி விஜய் அண்ணா” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version