தவெக அரசால் தொடங்கப்பட்டுள்ள . நலம் TN என்ற இணையதளத்தின் மூலம், அரசு மருத்துவமனைகளுக்கு பங்களிப்பு செய்யும் நடைமுறையை தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ்தளப் பக்கத்தில அவர் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;

எனது பொது வாழ்வின் அடித்தளமே விளிம்பு நிலை மக்கள் வந்து சிகிச்சை பெற்ற தஞ்சை மருத்துவக் கல்லூரிதான். அங்கு ஒரு சிறு குழந்தைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அதற்காக சண்டையிட்டு பெற்றதில் இருந்து தான் எனது பொது வாழ்வே ஆரம்பமானது.. அங்கே நடந்த சில நிகழ்வுகள் தான் ஆழமாக நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

சென்னை கோவை போன்ற மருத்துவமனைகளுக்கு செல்லும் வாய்ப்பு இருந்தாலும் அங்கே பணியாற்றினால் இன்னும் வசதி மிக்க வாழ்வு கிடைக்கும் என்று இருந்தாலும் என் கணவர் சிறப்பு சிறுநீரக மருத்துவராக மிகவும் அரிதான ஒரு துறையில் மூன்றாவது நபராக தேர்ந்தெடுக்கப்பட்டும் நாங்கள் தேர்ந்தெடுத்தது தஞ்சை மருத்துக் கல்லூரி. அங்கே விளிம்பு மக்களுக்கு பணியாற்றும் மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது இன்றும் நினைவு கூறுகிறோம்.

அதேபோல நான் திருமதி சுஷ்மா சிவராஜ் அவர்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் பொழுது டயாலிசிஸ் fluid விலை அதிகமாக இருப்பதும் கிடைக்காமல் இருப்பதற்குமான தீர்வை தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதற்கான தீர்வை பெற்றோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக பாரதப் பிரதமர் நரேந்திரமோடி  அவர்களை கடவுளுக்கு நிகராக வணங்குவதற்கு காரணம் அவர் கொண்டு வந்த மருத்துவ காப்பீடு திட்டம். உயர்ரக சிகிச்சை 5 லட்சம் வரை அளித்து பல கோடி உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்கள். பிரதமரின் மக்கள் மருந்தகம்.. மிகக் குறைந்த விலையில் சாமானிய மக்களுக்கு மருந்துகள் கொடுத்து இன்று அவர்களின் வாழ்நாட்கள் கூட நீட்டிக்கப்பட்டிருக்கிறது.. என்கிறது ஆராய்ச்சி.

அதனால் தான் அவரின் தொண்டராகிய நான் தெலுங்கானா ஆளுநராக பணியாற்றிய போது கொரோனா காலத்தில் ஒரு மருத்துவர் என்ற என்ற முறையில் கரோனா காலத்தில் மக்களுக்கு மருத்துவம் கிடைப்பதற்கு பல முயற்சிகள் எடுத்ததும் அங்கு மருத்துவர்கள்  மன அழுத்தம் கொண்டிருந்த நேரத்தில்.. பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு அவர்களுக்கு பக்க பலமாக இருந்தது மட்டுமல்லாமல் மருத்துவமனை உதவிகளை மேம்படுத்துவது எனது வழக்கமாகவே கொண்டிருந்தேன்.

நான் பொறுப்பேற்ற இரண்டு மாநிலங்களிலுமே மருத்துவர் என்ற முறையில் என்னால் சில உதவிகளை செய்ய முடிந்தது என்ற வகையில் ஆறுதல் அடைந்தேன்.

புதுச்சேரியில் அந்த கொரோனா காலத்தில் படுக்கை ஆக்சிஜன் போன்றவை எல்லாம் கிடைப்பதற்காக உயிர் காற்று என்ற ஒரு திட்டத்தை தொடங்கினோம். இந்த உயிர் காற்று மூலமாக ஒருவர் ஒரு படுக்கைக்கும் ஒரு ஆக்சிஜன் சிலிண்டருக்கும் உதவி செய்யலாம் என்று ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம்.

கடைகோடி சாமானிய மக்கள் தங்களது கடைசி நம்பிக்கையாக வரும் அரசாங்க மருத்து மருத்துவமனைகளில் தனியார் மருத்துவ மனைக்கு இணையாக அவர்களுக்கு அத்தனை சிகிச்சையும் கிடைக்க வேண்டும் என்பதை நான் எப்பொழுதுமே வலியுறுத்துவது.

இன்று சுகாதாரத்த துறையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியை பார்த்தேன். தமிழக முதலமைச்சர்  விஜய் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மருத்துவரான மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜா  அறிவித்த அறிவிப்பு பாராட்டுக்குரியது.

நலம் TN என்ற இணையதளம் அதன் மூலம் சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் அரசாங்க மருத்துவமனைகளில் மேம்படுத்துவதற்காக யார் வேண்டுமானாலும் பங்களிக்கலாம் என்ற ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது, இந்தப் பங்களிப்பு அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version