உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் செயல்படுவதாகவும், கவர்னரின் செயல்பாடுகள் தமிழக மக்க்ளுக்கு எதிராக உள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை அவரது இல்லத்தில் கொண்டாட உள்ளோம். லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர் என்ற விழிப்புணர்வை தொடங்கி வைக்க உள்ளேன். மதுரை, விருதுநகர் எப்போதும் காங்கிரசுடன் மிகுந்த நெருக்கத்துடன் உள்ள மண் என்றார்.

தேசியம், இந்தியா என்று சொல்லி மற்றவர்களை சங்கடப்படுத்தி கஷ்டப்படுத்தி திணிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். ஆனால், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பல்வேறு நம்பிக்கைகள், மொழிகள் கொண்ட இந்தியாவை உருவாக்க நேரு வழியில் வந்தவர்கள் நினைப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில்…

வந்தே மாத்தரம் என்ற சொல் எழுச்சியுடன் இந்திய தேசிய விடுதலை போராட்டத்தில் ஒலித்த சொல். அந்த சொல்லை எவ்வ்ளவு தவறுதலாக பயன்படுத்த முடியுமோ அதை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., செய்ய முற்படுகிறது. வந்தே மாதரத்தையும் அரசியலாக்குவது வருத்தத்திற்குரியது. தேசிய கீதமும் மிகுந்த மரியாதை தர வேண்டிய பாடல். அமித்ஷாவின் கீழ் தரமான செயலை, பாராளுமன்றத்தில் தெரிவிப்போம்.

 டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து வந்த பின் ஆளுநர் தேவையில்லாத பிரச்சனைகளில் ஈடுபடுகிறார். தமிழகத்தில் நல்ல முறையில் செயல்படும் அரசை  தேவையில்லாத சங்கடங்களை உருவாக்குவதற்காக அஜெண்டா வாங்கி வந்து இருப்பதாக சந்தேகம் வருகிறது. கவர்னர் தனது அதிகாரங்க்ளை மீறிய செயல்களை செய்கிறார். அமித்ஷா கட்டுபாட்டில் செயல்படும் கவர்னராக செயல்பட தொடங்கி உள்ளார். கவர்னரின் செயல்பாடுகள் தமிழக மக்க்ளுக்கு எதிரானதாகவே பார்க்கிறேன்.

அண்ணாமலை ஒவ்வொரு தேர்தலின் போது ஒவ்வொரு லட்சியம் வைத்து இருந்தார். லட்சியம் இல்லாத வாழ்க்கை சரியில்லாதது. லட்சியத்துடன் உறுதியாக இருக்க வேண்டும். அடிக்கடி மாறிக் கொள்கிறார்.

உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகள் தணித்து போட்டி என்ற தகவல் தவறானது என மாணிக்கம் தாகூர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version