டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 11வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.
குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று (ஜூன் 11) காலை முதல் மாலை வரை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமை தாங்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
“வளர்ச்சியடைந்த இந்தியா 2047-க்கான உள்ளடக்கிய மனித மேம்பாடு” என்ற மையக் கருப்பொருளின் கீழ் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் நாட்டின் அடித்தள மனித ஆற்றலை மேம்படுத்துதல். செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இளைஞர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மாற்றி அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
நிலையான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சுயதொழில் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான உத்திகளை வகுத்தல் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கால குழந்தை பருவக் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
