தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைதி பேரணியாக வருகை தந்து கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த வகையில் தூத்துக்குடி அண்ணா நகர் சந்திப்பு முன்பாக இருந்து முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர், அமைதி பேரணியாக வருகை தந்து கலைஞர் அரங்கம் முன்பாக உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவ சிலைக்கு
மாலை அணித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார் ரவீந்திரன் ராமகிருஷ்ணன் ஜெயக்குமார் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version