தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் மிகப்பெரிய வெற்றியடைந்த திட்டம் என்றால் அது மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் தான். கடந்த தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் இந்த வாக்குறுதி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

திமுக வெற்றியடைய இந்த திட்டமும் ஒரு காரணம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் கூட இந்த திட்டம் பல பெண்களுக்கு உதவியாக இருந்தது. இதன் மூலம் மாதம் ரூ.1000 வரை சேமிக்க முடிந்தது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது.

அதேப் போல கேரளாவில் அமைந்த புதிய ஆட்சியும் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் முனைப்பு காட்டியது. ஆனால் இதற்கு தனியார் பேருந்து உரிமயாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தனியார் பேருந்து தொழிலானது நஷ்டத்தில் நடந்து வருவதாகவும், பெண்களுக்கு அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவசம் வழங்கினால், மேலும் தனியார் பேருந்து தொழில் பாதிக்கும் எனவும், இதனால் பல நூறு குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் என கவலை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version