பரந்தூர் புதிய பச்சைமலை விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் அல்லது மாற்றப்படும் என்று தமிழக அரசு தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் மத்திய அரசிடம் இதுவரை வைக்கப்படவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் திமுக எம்பி பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான (TIDCO) மூலமாக பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக விண்ணப்பிக்கப்பட்டு, சுமார் 10,500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதற்கட்ட பணிகளுக்காக கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசால் ‘கொள்கை அளவிலான’ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பரந்தூரில் விமான நிலையம் வராது என தவெக தரப்பில் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தாலும், அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றோ அல்லது மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றோ தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசிடம் எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று அந்த பதிலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பரந்தூர் விமான நிலையத்துக்கான தேவையேற்படும் பணிகள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version