தென்னிந்திய திரைப்படம் எழுத்தாளர் சங்கத்தில் 2026-2029ஆம் ஆண்டு பதவிக்கான தேர்தலில் தலைவர், துணை தலைவர், செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட 21 பொறுப்புகளுக்கான தேர்தல் இன்று வடபழனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 

இயக்குனர் சேரன் தலைமையில் நம்ம கே.பாக்கியராஜ் அணியும், இயக்குனர் வி.சி.குகநாதன் தலைமையில் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணியும் போட்டியிட்டன.

தேர்தல் அதிகாரி உமா சங்கர் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

முதலில் தலைவர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டதில், நம்ம பாக்யராஜ் அணி சார்பில் தலைவராகப் போட்டியிட்ட இயக்குநர் சேரன் 270 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் வி.சி.குகநாதனுக்கு 155 வாக்குகள் கிடைத்துள்ளன.

இதையடுத்து செயலாளர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டதில், நம்ம பாக்யராஜ் அணியின் எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர் 240 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் மனோஜ் குமாருக்கு 193 வாக்குகள் கிடைத்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர்  சேரனுக்கு அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version