உத்தரகாண்ட் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகரான டேராடூண் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அங்குள்ள முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் கிடுகிடுகென உயர்ந்து தரைத்தளம் அனைத்தும் வெள்ளக்கிடங்காய் ஓடியது. டேராடூணில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பழமையான ‘டப்கேஷ்வர் மகாசிவன் கோவில்’ வளாகத்திற்குள் தம்சா நதியின் காட்டாற்று வெள்ளம் புகுந்துள்ளது.

நதியில் ஏற்பட்டுள்ள ராட்சத வெள்ளப்பெருக்கு காரணமாக, வெள்ள நீரானது கோவிலின் தரைத்தளம் மற்றும் படிக்கட்டுகளை முழுமையாக மூழ்கடித்தபடி ஓடியது. கோவிலின் உள்ளே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பிரதான கட்டமைப்புகள் மற்றும் சிலைகளைச் சுற்றிலும் தம்சா நதி வெள்ளம் அதிவேகத்தில் பாய்கிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version