ஒரே வாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களின் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 90 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.79 காசுகள் உயர்ந்து ரூ.104.46-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 0.86 காசுகள் அதிகரித்து ரூ.96.11-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் பொருளாதாரச் சூழல்களின் அடிப்படையிலேயே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதற்கும் இது வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

